என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யுபிஎஸ்சி தேர்வு"
- வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.
- சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.
அரசு தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பலரும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படிப்பதை காணமுடியும். அந்த வகையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நேரத்திலும் ஜோமோட்டோ ஊழியர் ஒருவர் தேர்வுக்கு படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'எக்ஸ்' தளத்தில் ஆயுஸ் சங்கி என்ற பயனர் பகிர்ந்த அந்த வீடியோவில், பரபரப்பான சாலையில் போக்குவரத்து நெரிசலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நிற்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. அப்போது அந்த வாலிபர் தனது செல்போனில் யூனைடெட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( யு.பி.எஸ்.சி.) விரிவுரைகளை பார்க்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு, கடினமாக படிக்க உங்களுக்கு வேறு உந்துதல் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று ஆயுஸ் சங்கி பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் ஜோமோட்டோ ஊழியரின் ஆர்வத்தை பாராட்டி பதிவிட்டனர். சிலர், இந்த வீடியோ மிகவும் ஊக்கமளிக்கிறது. இது முன்பை விட கடினமாக உழைக்க வேண்டும் என்ற உந்துதலை தருகிறது என பதிவிட்டுள்ளனர். அதேநேரம் சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.
After Watching this video, I Don't Think you Have any Other Motivation to Study Hard#UPSC #Motivation pic.twitter.com/BPykMKBsua
— Ayussh Sanghi (@ayusshsanghi) March 29, 2024
- இருவரும் சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளதாக யுபிஎஸ்சி கூறி உள்ளது
- யுபிஎஸ்சி-யின் கட்டமைப்பு வலுவானது மற்றும் முறைகேடாக பயன்படுத்த முடியாது.
புதுடெல்லி:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிஷா மக்ரானி, பீகாரைச் சேர்ந்த துஷார் ஆகியோர் தேர்வானதாக கூறியிருந்தனர். உண்மையிலேயே தேர்ச்சி பெற்ற இரண்டு நபர்களின் பெயர்களைப்போன்றே அவர்களின் பெயர்களும் இருந்ததால் அந்த பெயர்களை காட்டி அது தாங்கள்தான் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. யுபிஎஸ்சி தேர்வு முறையில் குளறுபடி நடந்திருக்கலாம் என்ற சர்ச்சையும் எழுந்தது.
ஆனால் யுபிஎஸ்சி நிர்வாகம், ஆவணங்களை சரிபார்த்ததில் ஆயிஷா மக்ரானி, துஷார் இருவரும் தேர்வாகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, தேர்வானதாகக் கூறப்படும் இரண்டு நபர்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்வானதாக இருவரும் கூறியது உண்மையல்ல. அவர்கள் தங்களுக்கு சாதகமாக போலியான ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம், ஆயிஷா மக்ரானி மற்றும் துஷார் இருவரும் சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளுக்கு முரணாக செயல்பட்டுள்ளனர்.
எனவே, தேர்வு விதிகளின் விதிகளின்படி, அவர்களின் மோசடி செயல்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்குமுறை சட்ட நடவடிக்கை ஆகிய இரண்டையும் மேற்கொள்ள யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது. யுபிஎஸ்சி-யின் கட்டமைப்பு வலுவானது மற்றும் முறைகேடாக பயன்படுத்த முடியாது. எனவே அத்தகைய தவறுகள் நடக்க சாத்தியமில்லை.
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் இதுபோன்ற உரிமைகோரல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன், யுபிஎஸ்சி-யிடமிருந்து உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாத்திமாவின் கார்டில் க்யூஆர் குறியீட்டுடன் யுபிஎஸ்சியின் வாட்டர் மார்க் இருந்துள்ளது.
- மக்ராணியின் அட்டையில் எந்த க்யூஆர் குறியீடும் இல்லாமல் சாதாரண காகிதத்தில் பிரிண்ட் அவுட் போன்று ஒட்டிருந்தது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஆயஷா பாத்திமா (23) மற்றும் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆயஷா மக்ராணி (26). இருவரும் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், இதில் ஆயஷா பாத்திமாவும், ஆயஷா மக்ராணியும் ஒரே பதிவு எண்ணுடன் ஒரே ரேங்க்கில் (184வது ரேங்க்) தேர்ச்சி பெற்றுள்ளதாக முடிவு வெளியாகி இருந்தது. இரண்டு பெண்களுக்கும் ஒரே எண், ஒரே முன் பெயர், ஒரே ரேங்க் இருக்கும்பட்சத்தில் அந்த 184வது ரேங்க் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வியும் எழுந்தது.
இதையடுத்து, சுமார் 200 கி.மீ இடைவெளியில் வசிக்கும் இரண்டு பெண்களும் தங்களின் அட்மிட் கார்டுடன் உள்ளூர் காவல்துறையில் யுபிஎஸ்சி மோசடி செய்துள்ளதாகக் கூறி விளக்கம் கேட்டு புகார் அளித்தனர்.
இருவரும் தங்களது அட்மிட் கார்டுகளை சமர்ப்பித்தனர். அதில், இருவருக்கும் ஒரே பதிவு எண் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், மக்ரானியின் அட்மிட் கார்டில், ஆளுமைத் தேர்வின் தேதி ஏப்ரல் 25 (வியாழன்) என்றும், பாத்திமாவின் தேதியில் ஏப்ரல் 25 (செவ்வாய்கிழமை) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், பாத்திமாவின் கார்டில் க்யூஆர் குறியீட்டுடன் யுபிஎஸ்சியின் வாட்டர் மார்க் இருந்துள்ளது. அதே சமயம் மக்ரானியின் அட்டையில் எந்த க்யூஆர் குறியீடும் இல்லாமல் சாதாரண காகிதத்தில் பிரிண்ட் அவுட் போன்று ஒட்டிருந்தது.
இந்நிலையில், தீவிர ஆவண சரிபார்ப்புக்கு பிறகு 184வது ரேங்க் ஆயஷா பாத்திமாவுக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது. இது போன்ற தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று யுபிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார்.
- யுபிஎஸ்சி தேர்வில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடமும் பிடித்தனர்.
தேர்ச்சி பெற்றவர்களில் 345 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள், 99 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள், 263 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 154 பேர் எஸ்சி பிரிவையும், 72 பேர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள்.
- காலிப்பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
- மிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3-ந்தேதி மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 4-ந்தேதி ஆகும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு ஜூலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் ஒரு மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்